பட்டுக்கோட்டையில் டெங்கு நோயை ஏன் இங்குள்ள மருத்துவர்களால் குணப்படுத்த இயலவில்லை. உயிர்கொல்லியாக அனைத்து தர மக்களையும் கொன்று குவித்துவரும் டெங்கு நோயை பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் பரவலாக இந்த நோய் பரவிதான் வருகிறது,,,
பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைவருமே பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளேயே நாடி வருகிறார்கள். ஆனால் இங்குள்ள மருத்துவமனைகள் சில முடிந்த அளவு பார்க்கிறார்கள் முடியாது என்ன நிலைமை வரும்போது திருச்சி தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் இருந்து வருகிறது. அந்த நோய்க்கான மருத்துவத்தை எந்த ஒரு பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவர்களும் தெரிந்துகொண்டு அதற்கான மருத்துவத்தை ஏன் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே இங்குள்ள மக்களின் கேள்வி குறியாகவே உள்ளது.
தெய்வத்திற்கு ஈடாக மருத்துவர்களேயே நம்பி இருக்கின்ற மக்களுக்கு இங்குள்ள மருத்துவர்கள் யாரேனும் டெங்கு நோய்க்கான முழு மருத்துவத்தையும் தந்தால் அவர்களுக்கு இந்த பட்டுக்கோட்டை சுற்றியுள்ள மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்…