அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று(11/04/2019) காலை போட்டி நடைபெறவில்லை. மதியம் நடைபெற்ற ஆட்டத்தில் AFCC SOLDIERS மற்றும் ARJ கல்லூரி அணியினர் மோதினர். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த AFCC Soldiers அணியினர் 85 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். பின்னர் 86 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ARJ கல்லூரி அணி, 4 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குறிப்பு : அதிரை AFCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.
நாளைய(12/04/2019) தினம்(மதியம்) ஆட இருக்கின்ற அணிகள் :
TR BOYS vs RCCC