45
பட்டுக்கோட்டையில் புகழ்பெற்ற நாடியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் உள்ள தேரடித் தெருவில் தொடங்கிய தேரோட்டம், வடசேரி முக்கம், பெரிய கடைத்தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் வழியாக இழுத்து வந்து நிறுத்தப்பட்டது. மேலும் நாளை மாலை 3 மணியளவில் மீண்டும் தொடங்கும் தேரோட்டம், தேரடித்தெருவிற்கு கொண்டு சென்று நிறுத்தப்படவுள்ளது.
இந்த தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதனால் இன்று பட்டுக்கோட்டை நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது.