அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று 06/04/2019 அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய தினம் இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் PCC காரைக்கால் அணியினரும், MAM கல்லூரி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த PCC அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது. பின்னர் 170 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய MAM அணி 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் PLCC PKT அணியினரும்TRPCC அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த TRPCC அணி 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய PLCC PKT அணி, 5.4 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குறிப்பு : அதிரை AFCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.