Home » அதிரையில் பூனைக்கறி பக்கோடா ! பக்காவாக காய் நகர்த்தி நடவடிக்கை மேற்கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் !!

அதிரையில் பூனைக்கறி பக்கோடா ! பக்காவாக காய் நகர்த்தி நடவடிக்கை மேற்கொண்ட அதிரை எக்ஸ்பிரஸ் !!

0 comment

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் தள்ளுவண்டி கடையில் மாலை நேர சிற்றுண்டியாக சிக்கன் பக்கோடா பொரித்து ஒரு முதியவர் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சலீம் என்பவர் கோழி பக்கோடா வாங்கியுள்ளார், அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரோமத்துடன் கூடிய ஒரு மாமிச துண்டு இருந்துள்ளன சந்தேகமடைந்த அவர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அவரின் முதுமை காரணமாக சட்ட நடவடிக்கை மட்டுமே சாத்தியம் என என்னிய அவர் அதிரை எக்ஸ்பிரஸ் உதவியை நாடினார் அதன் பேரில் ஒரு செய்தி பதியப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டிருந்தன.

இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளர்,மாநில உணவு பாதுக்காப்பு அதிகாரிக்கு இது குறித்த தகவலை அனுப்பியுள்ளார்.

தகவலை பெற்றுகொண்ட அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்திரவாதம் அளித்ருந்தனர் அதன்படி இன்று அறந்தாங்கியில் இருந்து வந்த உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் சந்தேக கறிகுறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த எம். பி. அபூபக்கர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், வந்திருந்த உணவு பாதுக்காப்பு அதிகாரிகளிடம் அவரின் ஏழ்மையை எடுத்து கூறியும், கறியை பட்டுக்கோட்டையில் இருந்து தவறான நபர் இவரை ஏமாற்றி விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்படி அவரிடம் எழுதி வாங்கிக்கொண்ட அதிகாரிகள் அந்த கடைக்காரரை எச்சரித்து சென்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter