Home » வாக்காளர் உணர்வு!! ஆக்கம் அதிரை அன்சாரி!!

வாக்காளர் உணர்வு!! ஆக்கம் அதிரை அன்சாரி!!

0 comment

தேர்தல் என்பது காங்கிரஸா அல்லது பாஜகவா ? என்பது அல்ல!!

ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா என்பதுதான்…!!

நாட்டை துண்டாடுவது ஹிந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதுதான்…!!

இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உபயோகமும் கிடையாது…

முஸ்லிம்களாகிய நாங்கள் அரசு வேலையோ, அரசாங்க உதவிகளையோ எதிர்பார்ப்பது கிடையாது. இஸ்லாமிய மக்களுக்களின் உரிமைகளுக்காக தன்னலமின்றி பாடுபடும் எந்த பாராளுமன்ற உறுப்பினரோ (MP), சட்டமன்ற உறுப்பினரோ (MLA) எங்களுக்காக யாரும் இந்த நாட்டில் இல்லை. இந்த நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, அதிக இழப்புகளை சந்தித்த, இந்திய குடிமக்களாக எங்களது உரிமைக்காக மட்டுமே போராடுகிறோம்.

இந்தியாவில் EVM என்கிற இயந்திர ஓட்டுப்பதிவு முறையை நீக்கி அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நாடுகளைப்போன்ற வாக்குச்சீட்டு முறையை வேண்டுகிறோம்.

இது எங்களது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, நேர்மையான தேர்தலை விரும்பும் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான். எங்களது வாக்குகள், நேரடியாக பிரதமர் மற்றும் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காகவே பயன்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். இஸ்லாமிய வாக்கு வங்கி அதிகமாக உள்ள ஒரிசா, உத்தரபிரதேசம், மகாரஷ்ட்டிரா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு, பின்தங்கிய மாநிலங்களில் இருந்து முஸ்லிம்கள் அல்லாத மக்கள் வலுக்கட்டாயமாக குடியேற்றம் செய்யப்படுகிறார்கள், ஆதார் கார்டு பதிவுடன். தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடி வடமாநிலங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் குடியேற்றப்பட்டு ஆதார் கார்டும் பதிவு செய்யப்பட்டு வாக்குரிமையும் வழங்கப்பட்டுவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விவரங்கள் மதவாத சக்தியான பாஜகவை எதிர்ப்பதாக சொல்லும் காங்கிரஸ் கட்சியினரும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், இந்த நேரத்தில் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவின் காரணமாக, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவிரும்பாது.

நள்ளிரவில் பணமதிப்பு நீக்கத்தை கொண்டுவந்த மோடியால், ஏன் விவசாய கடனை ரத்து செய்ய முடியவில்லை?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை ரத்து செய்வதாக கூறுகிறார்கள்…

காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவில்தான் இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் ஆட்சியில் தொடரமுடியும் என்பதுதான் உண்மை. அகில இந்திய அளவில் காங்கிரஸ் – பா.ஜ.க இரண்டுமே ஒன்றுதான். அதுபோலவே, தமிழ் நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் ஒன்றுதான். இவைகளுக்கெல்லாம் மக்கள் நலன் என்பதைவிட, அதிகாரத்திற்கு வரவேண்டும், அதன்மூலம் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, நாட்டு நலன் என்பது பேச்சளவில்தான் இருக்கும். இரண்டாவது அணி என்பது இந்தியாவில் கிடையாது என்பதே நிதர்சன உண்மை.

தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு கடையில் ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வருமானம் வருகிறது என்று கணக்கில் வைத்துக்கொண்டால், 6 ஆயிரம் கடைகளுக்கு, வருடத்திற்கு 6 லட்சம் கோடிகள் அரசுக்கு வருமானமாக கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, வருடத்திற்கு 60 ஆயிரம் பேர் மதுவால் உயிர் இழக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும், மணல் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லோடுகள் ஏற்றப்படுகின்றது. ஒரு லோடு மணல் ரூ 25000 என்றால் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி வருமானம் வருகிறது.

இந்தியாவில் மக்கள் தொகையில் 37% முஸ்லிம்களும், 38% இந்து மக்களும், 25% மற்றவர்களும் இருந்தாலும், வரிகள் அனைத்தையும் செலுத்துவதில் இஸ்லாமியர்கள் மட்டுமே அதிக சதவீதத்தில் இருக்கிறார்கள். அதேநேரத்தில் அரசு உதவிபெருவதில் முஸ்லிம்கள் 1% த்திற்கும் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள்.

அரசு மானியத்தில் வழங்கப்படும் அத்தியவாசிய பொருள்களை ரேஷனில் வாங்குவதிலும் இஸ்லாமியர்கள் பயன்பெருபவர்களாக இல்லை என்பதும் உண்மை நிலவரம், அரசு வேலைகளிலும் 1 சதவீதம்கூட இஸ்லாமிய மக்கள் பயன்பெறவில்லை அரசியலில் இஸ்லாமிய மக்கள் ½ சதவீதம் கூட இல்லை என்பதும், மற்ற மதத்தினரே 99. ½ இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மை என்ற பெயரில் அதிகம் வஞ்சிக்கப்படுவதும் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்.

6000 பத்திரிக்கையாளர்களும், ஊடகவியளர்களும் சேர்ந்து பணத்திற்காகவும், பரபரப்பிற்காகவும், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டும், வரலாறுகளை திருத்தும் இஸ்லாமியர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்கிறார்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும், பத்திரிக்கைகளின் இந்த பொய்களால், எதிர்கால சந்ததிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதைப்பற்றி யாரும் சிந்தித்ததாகவோ, கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. இது தொடரும் பட்சத்தில் இன்னும் நூறு தலைமுறைகள் ஆனாலும் நமது குரல் வெளிவராது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் சுதந்திரம் என்ற பெயரில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் மறைமுக சதுரங்க விளையாட்டுதான் இவ்வளவுக்கும் காரணம்.

– M.S. முகமது அன்சாரி
ஏரோ ட்ராவல்ஸ், சென்னை.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter