கொத்தமல்லியில் உள்ள மருத்துவ நன்மைகள்….
மிக எளிதாகவும் மளிவான விலையிலும் அனைத்து காலகட்ட்த்திலும் கிடைக்ககூடியது கொத்தமல்லி. இதனால்தான் என்னவோ அதன் பயன் நமக்கு அதிக அளவில் தெரியவில்லை.
கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது.
மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள் ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
இரலை பலபடுத்தவதோடு, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது.
கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும்.
தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.