38
தஞ்சை அருகே வயலூரில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . தஞ்சையில் இருந்து கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த 18 பேர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.