Home » அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்.. இலங்கையில் உச்சகட்ட பரபரப்பு.. அவசர நிலை பிரகடனம் !

அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்.. இலங்கையில் உச்சகட்ட பரபரப்பு.. அவசர நிலை பிரகடனம் !

0 comment

இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடித்து வருவதால் தற்போது பெரிய அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. இன்று காலை 3 தேவாலயங்களில் கொழும்பில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. அதன்பின் மூன்று ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.

கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்தது. அதன்பின் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

அதன்பின் 6 மணி நேர இடைவெளியில் தெய்வாலா மிருகக்காட்சி சாலைக்கு எதிராக இருக்கும் ஹோட்டலில் புதிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். அதன்பின் டிமாட்டகொடா பகுதியிலும் இன்னும் ஒரு குண்டு வெடித்துள்ளது.

இதனால் தற்போது இலங்கையில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அங்கு தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்கி இருக்கிறார்கள். அதேபோல் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தை வடக்கு பகுதிக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter