45
அதிராம்பட்டினம் பகுதிகளில் சில நாட்களாக ஜியோ தொலைத்தொடர்ப்புக்காக வயர் பதிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியருகே சாலையில் பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டு இனைப்பு கொடுக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகின்றன, இதில் அதனருகே செல்லும் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மேலத்தெரு மேல் நிலை குடி நீர் தொட்டியில் இருந்து திறந்து விடப்பட்ட குடி நீர் வெட்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆறாக பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.
இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு இது குறித்த புகாரை அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து குடி நீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.