Monday, December 9, 2024

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க இன்று 5வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி , பின்னர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்-ரஹானே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. நன்றாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ரஹானேவும் தன் பங்கிற்கு 61 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ICC ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.


 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது AFFA!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டிகளின் முடிவுகள்!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கியது. அதிராம்பட்டினம்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : நாகூரை வீழ்த்தியது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி...
spot_imgspot_imgspot_imgspot_img