Home » 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என சூளுரைத்த அமைச்சர்…ஆனால் மொத்த வாக்குகளே 2.27 லட்சம் தானாம் !

70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என சூளுரைத்த அமைச்சர்…ஆனால் மொத்த வாக்குகளே 2.27 லட்சம் தானாம் !

0 comment

இன்னும் சில தினங்களில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க போகிறது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் போட்டியிடுகிறார். இதையொட்டி அங்கு அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒட்டப்பிடாரம் வெற்றி குறித்து ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது :

இந்த தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை.. புரட்சி தலைவரின் வெற்றிக் கோட்டை.. அம்மாவின் இரும்பு கோட்டை… எடப்பாடியின் எஃகு கோட்டை..” என்று டைமிங்காக பேசியவர் திடீரென “அதிமுக இங்கு 70 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். திமுக டெபாசிட் இழக்கும்.. திமுக மட்டுமில்லை.. எல்லா கட்சியுமே இந்த தொகுதியில் டெபாசிட் இழக்கும்” என்று சொல்லிவிட்டு சென்றார். இப்பேட்டியால் அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆகினர்.

ஏனெனில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தமே 2 லட்சத்து 27 ஆயிரம் ஓட்டுக்கள்தான் உள்ளன. இதில் எப்படி அதிமுக 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்று அமைச்சர் சொன்னார் தெரியவில்லையே என இன்னமும் தொகுதி மக்கள் யோசித்து கொண்டே இருக்கிறார்களாம் !

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter