கடந்த இரு மாதங்களாக எல்லா இடங்களிலும் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை தான் டெங்கு.இந்த டெங்கு காய்ச்சல் தூய்மையான நன்னீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் பரவுகின்ற ஒரு நோய் தான் டெங்கு..
இந்த கொசுவானது கடித்த 4 அல்லது 5 நாட்களில் பரவுகிறது.இந்த டெங்கு காய்ச்சலானது கடந்த சில நாட்களாக வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.நமதூரை சார்ந்த டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி காவேரி மருத்துவமனைக்கு தொடர்ந்து படையெடுத்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் பெரிதும் அலைச்சலுக்கு ஆளாக்கப்படுவது நமக்கெல்லாம் மிகவும் வருத்தமடையச் செய்கிறது..
ஆகவே இதனை முற்றிலும் தடுப்பதற்கு நாம் எங்கு பார்த்தாலும் மழையின் காரணமாக டயர்,தேங்காய் மட்டை,பழைய வாளி போன்ற எந்த இடங்களிலெல்லாம் சிறு அளவாகினும் தண்ணீர் தேங்கி இருப்பின் அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட வேண்டும்.
மேலும் பப்பாளி இலைச்சாறு,நிலவேம்பு கசாயம்,இளநீர் போன்றவை இந்த நோய்க்கு நல்ல தடுப்பு மருந்து இதனை நாம் பருகிட முயற்சி செய்யவேண்டும்….
நோய் வருவதற்கு முன்னரே பல தடுப்புகளை நம்மையும்,நம்முடைய குடும்பத்தாரையும் தற்காத்துக் கொள்வோம்…
முகமது அசாருதீன்