அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துகொண்டிருந்தன.
அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை காலை அதிரை சிஎம்பி லேன், சேர்மன்வாடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பல கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ரூ. 1,750 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடைகளின் உரிமமும் சரிபார்க்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இனிமேலும் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை கண்காணிப்பதற்காக சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது உறுதியனால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.