தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் மருத்துவ அணிச் செயலராக சமீர் அலி (19)அவர்கள் இன்று புதிதாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமுமுக, மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் வருகின்றனர்.
இதுகுறித்து தமுமுகவின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர்.எம்.ஆர் கமாலுதீன் கூறியதாவது:-
தமுமுக மருத்துவ அணி செயலராக அதிரை சமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். அதிரை தமுமுக சார்பில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின், அனைத்து சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில், கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும், ஆம்புலன்ஸ் வாகனம், , இரத்த தானம், மருத்துவ உதவி உள்ளிட்ட அவசர கால மருத்துவச் சேவைகளை, இவரைத் தொடர்புகொண்டு பெறலாம்’ என்றார்.