அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 10/05/2019 வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ S.அகமது அஷ்ரஃப் ( துணை தலைவர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
சிறப்பு பயான்கள் : ஜனாப் அப்துல்லாஹ் மௌலவி
அறிக்கை வாசித்தல் : சகோ. A.M.அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
நிகழ்ச்சி தொகுப்பு : P. இமாம்கான்
நன்றியுரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 67-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாக இனிதே சிறப்பாக நடைபெற்றது.
2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர – சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்.
3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீது போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.
4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
5) அதிரை காஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய சகோ. இமாம்கான் அவர்களுக்கு ABM ரியாத் கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.