Home » அதிரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க பழஞ்சூர் செல்வம் நிதி உதவி !!

அதிரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க பழஞ்சூர் செல்வம் நிதி உதவி !!

0 comment

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

போதிய அளவில் கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் வசதி இன்மையால் மாணவ,மாணவிகள் முதற்கொண்டு ஆசிரியைகளும் அவதியுறும் நிலை இருந்து வந்தன.

இதனை அறிந்த திமுகவின் கலை இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு பழஞ்சூர் செல்வம் மேற்கூறிய பள்ளி கூடத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இந்த் திட்டத்திற்காக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக
₹50 ஆயிரத்திற்கான காசோலையை இன்று காலை எவர்கோல்டு நிறுவனத்தில் மேலாளர் திரு திள்ளை அவர்கள் மூலம் பள்ளியின் ஆசிரியர் மாலதியிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்விகுழு தலைவர் ஷரிஃப் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர ஷாகுல் ஹமீது, இந்தியன் ரெட்கிராஸ் அதிரை கிளை சேர்மன் மரைக்கா கே. இதீரிஸ் அஹமது, சுஐப் சமூக ஆர்வலர் ஹயாத் ஜாஹீர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு காசோலையை பள்ளியின் முதல்வர் மாலதியிடம் ஐம்பதாயிரத்திற்கான காசோலையை வழங்கினர் .

காசோலையை பெற்றுக்கொண்ட ஆசிரியை இவ்வுதவியை செய்த நல்லுள்ளம் கொண்ட திரு செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter