அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இன்று சனிக்கிழமை இவர் வேலை நிமித்தமாக அதிரை-முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே இவர், அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் அதிரை-முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.