Home » வளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்… பதிலடிக்கு தயார் என்ற சவுதியின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு !

வளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்… பதிலடிக்கு தயார் என்ற சவுதியின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு !

0 comment

மத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது. ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு ஏற்கனவே மோசமாக உள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் குழாய்களை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குண்டுவீசி தகர்த்ததால் இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

இதனையடுத்து ஈரானை அச்சுறுத்தும் முயற்சியாக வளைகுடாவில் கூடுதல் படைகளை குவிக்க, அமெரிக்காவை சவுதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது. உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எதையும் சந்திக்க தயார் என சவுதி அரபியா கூறியுள்ளது.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான அடல் அல் ஜூபெய்ர், சவுதி அரேபியா போரை விரும்பவில்லை. போரை தவிர்க்கவே விரும்புகிறது. ஆனால் ஈரான் போரை விரும்பும்பட்சத்தில் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ஈரானுக்கு எங்களின் முழுபலத்தை காட்டி பதிலடி கொடுக்க எந்நேரமும் ஆயத்தமாக உள்ளதாக குறிப்பிட்டார். நாட்டையும், நாட்டின் நலன்களையும் பாதுகாப்பது ஒன்றே எங்களது முக்கிய குறிக்கோள். அதற்காக எந்த எல்லைக்கும் நாங்கள் செல்வோம் என்றார்.

ஈரானுடனான பிரச்சனை பற்றி விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அரபு லீக் ஆகியவற்றின் அவசரக் கூட்டத்திற்கும் சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது. வளைகுடாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவில் தேர்தல் முடிந்துவிட்டதால் இனி பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter