தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேலத்தெரு இளைஞர்கள் தீவிரமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக இன்று சாக்கடைகள் மற்றும் பெரிய அளவில் வளர்ந்து இருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் முலம் சுத்தம் செய்து வருகின்றனர்.மேலத்தெரு இளைஞர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி முழுவதும் சுத்தமாகி வருகிறது.