Home » NIA என்னும் பாஜகவின் துணை அமைப்பு…!

NIA என்னும் பாஜகவின் துணை அமைப்பு…!

by admin
0 comment

இந்திய தேசியம் பல்வேறுபட்ட பாதுகாப்பு அமைப்புகளையும்,மிகவும் திறமை வாய்ந்த உளவு அமைப்புகளையும்,புலனாய்வு அமைப்புகளையும் அரசின் அங்கமாக சுதந்திர அமைப்பாக கடந்த காலங்களில் இருந்தன.

ஆனால் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு சுதந்திர அமைப்புகள் பாஜகவின் துணை அமைப்புகளாக மாறத் தொடங்கி இன்று முழுவடிவம் பெற்று பாஜகவின் அங்கமாகவே செயல்படுகின்றன.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. அதில் 68 பேர் கொல்லப்பட்டனர்.இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் தொடர்புடையதாக முக்கிய குற்றவாளியாக அசிமானாந்தவை கைது செய்தது, பின் அப்ரூவர் ஆகி குற்றத்தையும் ஒத்துக்கொண்டார்.ஆனால் கடந்த கால வழக்கு விசாரணைகளில் NIA சரிவர ஆதாரங்களை சமர்பிக்காத காரணத்தால் அவரையும் அவரை சார்ந்தவர்களையும் வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது.இது சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் மூலம் NIAவின் விசாரணை குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானகவே அதன் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்துத்துவ போக்கு கொண்ட குற்றவாளிகளுக்கு மத்தியில் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது.உதாரணத்திற்கு முஸ்லீம் பெயரை கொண்டவர்கள் விசாரணை என்று வந்துவிட்டாலே NIA இல்லாமல் இருந்த்தே இல்லை, அந்தளவிற்கு முஸ்லீம்களை குற்றவாளிகளாக்குவதில் அவ்வளவு ஆர்வத்தை கொண்டு உள்ளது NIA என்ற அமைப்பு.

போபால் தொகுதியில் போட்டியிட்ட மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யாசிங் தாக்கூர் பிணையில் வெளிவருவதற்காக பல்வேறு சமரசங்களையும் வாதங்களையும் நீதிமன்றத்தில் வாதிட்டு குற்றவாளிக்கு அதுவும் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியாருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இருந்தும் அவரிடம் மென்மையான போக்கை கடைபிடித்து நாடாளுமன்ற வேட்பாளராக ஆவதற்கு அத்தனை திரைமறைவு வேலைகளையும் கனகச்சிதமாக அரங்கேற்றியது NIA. இப்படி பல்வேறு வழக்குகளில் இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராக சமரச போக்கை கடைபிடித்து வருவதால் NIA பாஜகவின் துணை அமைப்பு என்று விமர்சனம் செய்யும் அளவிற்கு அதன் நம்பகுத்தன்மை சீர்குலைந்து விட்டது.

தமிழகத்தில் தற்சமயம் முகாம் அமைத்து பல்வேறு யூகங்களையும்,பீதியையும் முஸ்லீம் சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடுவது போல் அதன் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.மற்ற சமூக மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் NIAவின் செயல்பாடுகள் இருந்து வருவது மிகவும் கவலைக்குறியதாக இருக்கிறது.நாட்டில் பல்வேறு சம்பவங்கள், படு கொலைகள்,தாக்குதல் போன்றவை முஸ்லீம் என்ற ஒற்றை காரணத்திற்காக இந்துத்துவ அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டது.அவைகள் குறித்து NIA எடுத்த விசாரணைகள் என்ன? அரியானவில் பத்மாவத் திரைபடம் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற போர்வையில் கர்னி சேனா அமைப்பினர் பள்ளி செல்லும் குழுந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்களே அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தது?

இப்படி நாம் அடுக்கி கொண்டே போகலாம் NIA என்ற சுதந்திரமான அமைப்பு நாக்பூரில் இருந்து வரும் உத்தரவுகளையும் பாஜக,இந்துத்துவ அமைப்பினரை பாதுகாக்கும்,காப்பாற்றும் அரணாகவே செயல்படுகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்து உள்ளன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter