Home » தேனியில் மட்டும் தப்பித்த அதிமுக கூட்டணி… மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி !

தேனியில் மட்டும் தப்பித்த அதிமுக கூட்டணி… மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி !

0 comment

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் மொத்தமாக தெரிந்துவிடும். இந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 300+ இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜக கூட்டணி 350+ இடங்களில் வென்றுள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் உருவெடுத்து உள்ளது.

ஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தது. இதில் பாஜக ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் வெற்றிபெறவில்லை.

அதே சமயம், தமிழகத்தில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கோவையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போது அங்கு தோல்வி அடையும் நிலையில் உள்ளது. சிதம்பரத்திலும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அதிமுகவிற்கு கை கொடுத்து இருக்கும் ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ஓ. பி. ரவீந்திரநாத் மட்டும்தான். அவர் மட்டுமே அதிமுகவிற்கு இந்த தேர்தலில் வெற்றியை தேடி தர போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பின்னடைவை சந்தித்த இவர் தற்போது முன்னிலையில் உள்ளார்.

45000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருக்கிறார். ஓ. பி. ரவீந்திரநாத் தற்போது 2.83 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். காங் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2.30 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெறும் 74 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தியது மற்றும் எடப்பாடி அரசின் மீதான அதிருப்தியே தேர்தலில் எதிரொளித்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter