Home » கட்டாயமாக்கப்படும் ஹிந்தி.. ஒன்றிணைந்து எதிர்க்கும் தமிழகம்.. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #TNAgainstHindiImposition !!

கட்டாயமாக்கப்படும் ஹிந்தி.. ஒன்றிணைந்து எதிர்க்கும் தமிழகம்.. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #TNAgainstHindiImposition !!

0 comment

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ள புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மும்மொழி கல்வி கொள்கையானது தாய் மொழியுடன்  இணைப்பு மொழியான ஆங்கிலம் அவற்றுடன் வேறொரு மொழியான இந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழி தேர்வு மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக எதாவது ஒரு இந்திய மொழி  இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலத்தில் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று  இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் இந்த இந்தி திணிப்பிற்கு தங்களின் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition என்னும் பெயரில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter