92
வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை நேற்று இரவு தென்பட்டதையடுத்து அந்த நாடுகளில் நோன்புப் பெருநாள் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை தமிழகத்தின் தூத்துக்குடி மாநகரில் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நாளை ரமலான் நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.