சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி ஆண் வாக்காளர் 19,72,641, பெண் 20,13,768 என வெளியிடப்பட்டது. அதன் பிறகு செய்யப்பட்ட தொடர் திருத்தத்தின் படி16081ஆண் வாக்காளர்களும், 16,473 பெண் வாக்காளர்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள், 18வயது நிறைவடைந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் இன்று முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், 8ம் தேதியும், 22ம் தேதியும், வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.