54
அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அஹ்லன் கலீஃபா அவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றது.
அஹ்லன் கலீஃபா – ஆலிமா ஆதிலா தம்பதியினரின் திருமண நிக்காஹ் நேற்று 07/06/2019 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிக்காஹ் விழாவில் உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி சென்றனர். மேலும் நிக்காஹ் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
மேலும் இன்று இரவு வலிமா என்னும் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.