Home » அதிரை: மின்வாரியமும் BSNLலும் கூட்டு சதி !! நுகர்வோரின் புகார்களை புறக்கணித்து வருவதாக புகார் !!

அதிரை: மின்வாரியமும் BSNLலும் கூட்டு சதி !! நுகர்வோரின் புகார்களை புறக்கணித்து வருவதாக புகார் !!

0 comment

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது மின் வாரிய அலுவலகம், அதிராம்பட்டினம் பொதுமக்களின் பொருளாதாரத்தில் வாங்கப்பட்ட இந்த இடத்தில் தான் 33KV துணை மின் நிலையமும் இயங்கி வருகிறது .

இந்நிலையில் அதிரையில் ஏற்படும் மின் தடை உள்ளிட்ட புகார்களை தொலைப்பேசி வாயிலாக தெரிவிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மின் வாரிய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மின் வாரிய அதிகாரிகளோ, பிஎஸ்என்எல் நிர்வாகமோ கண்டுகொள்வதாக தெரியவில்லை .

இதனால் மின் நுகர்வோர் தங்களது புகார்களை மின் வாரியத்திற்கு தெரிவிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அதிரை மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்த வகையில், மின் வாரியத்தின் சார்பில் தொலைபேசி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டு விட்டது என்றும், புகார் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

இது குறித்து அதிரை தொலைபேசி இணைப்பக அதிகாரிகளிடம் எமது செய்தியாளர் விசாரித்த வகையில் ….

தொலைப்பேசி பழுது குறித்து எந்த புகாரும் அதிராம்பட்டினம் BSNL அலுவலகத்திற்கு வரவில்லை என இணைப்பக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நுகர்வோருக்கு சேவை செய்ய வேண்டிய மின் வாரியமோ மெத்தன போக்காக உள்ளது குறித்து பொதுமக்கள் ஆதங்கத்தில் உள்ளனர் .

உயரதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் முன் நிர்வாக பழுதை நீக்கிக்கொள்ள அதிரை மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

செய்வார்களா ?

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter