101
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ வாக கடந்த 2016 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுகவைச் சேர்ந்த கு. ராதாமணி.
சிறிது காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் ராதாமணியின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.
ராதாமணியின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.