Home » இனி இந்தி, ஆங்கிலம் மட்டுமே.. தமிழில் பேசக்கூடாது.. தெற்கு ரயில்வேயின் அதிர்ச்சி உத்தரவு !

இனி இந்தி, ஆங்கிலம் மட்டுமே.. தமிழில் பேசக்கூடாது.. தெற்கு ரயில்வேயின் அதிர்ச்சி உத்தரவு !

0 comment

அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு சுற்றறிக்கை அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு மொழி பிரச்னை தான் காரணம் என்பதால் இப்படி ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழிப்பிரச்னை தான் காரணம் என தெரியவந்தது.

ஒரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் தமிழில் ரயிலை அனுப்ப வேண்டாம் என சொன்னதை, இந்தி மட்டுமே தெரிந்த மற்றொரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரியாக புரிந்து கொள்ள தெரியாமல் ரயிலை அதே பாதையில் அனுப்பிவிட்டுள்ளார். இதுவே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு கொண்டு சென்றது.

இதையடுத்து தெற்கு ரயில்வ அதிகாரி சிவா என்பவர் அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவரச சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த அறிவிப்பில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில்வே இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் செய்ய வேண்டும். இருவரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசி கொள்ள வேண்டும். தமிழில் பேசிக்கொள்ளக்கூடாது. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பிராந்திய மொழிகளை (தமிழ் உள்பட) பேசக்கூடாது. பணியில் இருக்கும் போது இதனை கண்டிப்பாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நேரடியான இந்தி திணிப்பு என கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter