45
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்கள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் பலரும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடுமையான வறட்சியின் காரணமாக காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தரமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.