54
மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்தவர் இப்ராஹிம்ஷா வயது 41 தனது இருசக்கர வாகனத்தில் அதிராம்பட்டினத்திற்கு வேலை நிமித்தமாக வந்து சென்றுள்ளார், அப்போது வாகனம் ராஜமாடம் என்ற இடத்தை கடந்த போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது நிலைத்தடுமாறி பலமாக மோதியது இதில் சம்பவ இடத்திலேயே இப்ராஹிம்ஷா காலமானார்.
இதுகுறித்து தகவலறிந்த அதிரை காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன .