41
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
பருவ மழையும் இவ்வாண்டு பொய்த்துப் போனதால் விவசாய நிலங்களும் நீரின்றி வரண்டு காணப்படுவதோடு அத்தியாவசிய தேவைகளான நீர், உணவு போன்றவைகள் அனைத்தும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக (ECR) கடற்கரை சாலை பிலால் நகர் அருகே உள்ள கிராணி மைதானத்தில் இன்று மழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனை யும் நடைபெற்றது.
இந்த மழைத் தொழுகைக்கு திரளானோர் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டனர்.
புகைப்பட உதவி: சேக்கன்னா நிஜாம்