அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
தினசரி 2 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் முதல் போட்டியில் 5Sky Sporting காயல்பட்டினம் – மலப்புரம் கேரளா அணிகள் மோதின.
இதில் காயல்பட்டினம் அணி 2 – 1 என்கிற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான Jegan Memorial கன்னியாகுமரி தூத்தூர் – CCK காரைக்கால் அணிகள் மோதின.
சம பலம் வாய்ந்த இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துக் கட்டிய போதும் தனது முதலாவது கோலை காரைக்கால் அணி தன் வசமாக்கி முன்னிலை வகித்தது.
இருப்பினும் சற்றும் சலைக்காமல் பொறுப்புடன் ஆடிய தூத்தூர் அணி இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் தனது முதல் கோலை அடித்ததும் ஆட்டம் பரபரப்பானது.
இறுதியாக 1 – 1 என்கிற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் ‘டை பிரேக்கர்‘ முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் CCK காரைக்கால் அணி 5 – 4 என்கிற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான தூத்தூர் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
“ஜூட்ஸன்” தலைமையிலான நடப்பு சாம்பியன் தூத்தூர் அணி வெளியேறியது அதிரை கால்பந்து ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
நாளைய தினம் அதிரை TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி – தென்னரசு பள்ளத்தூர் அணிகளும்,
திண்டுக்கல் – நாகர்கோவில் களம் காண உள்ளது.