Home » அதிரை யூசுஃப் மௌலானா மறைவிற்கு தெஹ்லான் பாகவி இரங்கல்!!

அதிரை யூசுஃப் மௌலானா மறைவிற்கு தெஹ்லான் பாகவி இரங்கல்!!

by
0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகமான உலமாக்களையும், ஹாஃபிழ்களையும் கொண்ட பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்த இளம் மெளலவி முஃப்தி முஹம்மது யூசுப் அவர்கள் தனது 42 வது வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

மெளலவி முஹம்மது யூசுஃப் அவர்கள் எனக்கு அறிமுகமானவரும் கூட. அவருடைய தந்தை ஃபத்தாஹ் ஆலிம் அவர்களும் பிரபலமான மார்க்க அறிஞர் ஆவார்.

மிகச்சிறந்த இளம் இறையச்சமுடைய அவரின் மரணம் எனக்கு வேதனையை தருகின்றது. அன்னாரை இழந்து வாடுகின்ற அவருடைய குடும்பத்தினருக்கும், பெற்றோருக்கும் எனது ஆறுதலையும், பிரார்த்தனையையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு ஸப்ரன் ஜமீலா என்கிற அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

மரணமடைந்த முஃப்தி முஹம்மது யூசுப் அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை தருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடத்தில் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

-தெஹ்லான் பாகவி,
தேசிய துணை தலைவர், எஸ்.டி.பி.ஐ

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter