உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிரக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியாததால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
இதனை மையமாக வைத்து நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். ட்விட்டரிலும் தங்கள் பிரச்னை சுட்டிக்காட்டி ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.