அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினரும் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் அணியினரும் மோதினர்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் சமபலத்தில் ஆடின. அதிலும் நாகூர் அணியின் அனைத்து வாய்ப்புகளையும் விழுப்புரம் அணியின் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார்.
இதையடுத்து முதல் பகுதி நேர ஆட்ட இறுதியில் நாகூர் அணி 1 கோல் அடித்து முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியில் விழுப்புரம் அணி 1 கோல் அடித்து பதிலடி கொடுத்தது.
ஆட்டநேர இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ட்ரைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் அணி 8-7 என்ற கோல் கணக்கில் கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இன்றைய ஆட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் கால்பந்தாட்ட வீரர் அஹமது ஹாஜா பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆட்டத்தை துவக்கி வைத்தார்.
நாளைய(05/07/2019) தினம் இறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :
யுனைடெட் ஸ்போர்ட்ஸ் விழுப்புரம் – கலைவாணர் 7s கண்டனூர்