உலக கோப்பை கால்பந்தாட்ட அணி தேர்வில் சஊதி அரேபிய அணி தேர்வானது நாம் அறிந்ததே. அதை கொண்டாடும் விதமாக அந்நாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் சென்ற மாதம் இலவச அழைப்பு(Unlimited Free minutes), இலவச டேட்டாக்கள் வழங்கி மகிழ்வித்தன.
அதை தொடர்ந்து அனைத்து சஊதி கால்பந்தாட்ட அணியின் ஆட்டங்களும் இலசவசமாக ஒளிபரப்பாக வேண்டும் என சஊதி இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
அந்நாட்டின் விளையாட்டு ஆணைய தலைவர் துர்கி அல் சேக் கூறுவதாவது, சஊதி மக்கள் தங்களுக்கு விருப்பமான அணிகளின் விளையாட்டினை எவ்வித தடையும் இன்றி கண்டுக்களிக்க இளவரசர் வழிவகுத்துள்ளார் என தனது பேட்டியில் தெரிவித்தார்.
சர்வதேச அணிகளின் பட்டியல் விவரப்படி சஊதி கால்பந்தாட்ட அணியின் ஆட்டங்கள் ஆகஸ்டு 2018 ல் தொடங்கவுள்ளது.
இந்த உத்தரவால் கால்பந்தாட்ட ரசிகர்களிடம் இருந்து இளவரசருக்கு பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
.