221
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலத்த காயமடைந்தனர்.
இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சாலை விபத்தில், படுகாயமடைந்த இருவரும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சையில், இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அவ்விருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அதிரையை சேர்ந்த ஆனந்த், மற்றொருவர் பெயர் தெரியவில்லை.