Home » அதிரையர்களை இழிவாக பேசும் கிங் ஷாப்பிங் மால் நிர்வாகம் !!

அதிரையர்களை இழிவாக பேசும் கிங் ஷாப்பிங் மால் நிர்வாகம் !!

0 comment

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் இயங்கி வரும் கிங் ஷாப்பிங் மாலில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதனிடையே இந்த நிறுவனத்தில் விற்பனையாகும் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. அவ்வாறான பொருட்களை முறைப்படி மாற்றி கேட்கும் நுகர்வோர்களை கிங் ஷாப்பிங் மால் நிர்வாகத்தினர் இழிவாக நடத்தியும் ஒருமையில் பேசியும் வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய அதிரையரான ஜெ. முகம்மது தம்பி, கிங் ஷாப்பிங் மாலில் கடந்த மாதம் பள்ளியில் படிக்கும் எனது குழந்தைக்காக குடிநீர் பாட்டில் வாங்கினேன். அதில் நீர் ஊற்றியபோது நீர் கசிந்தது. உடனே குடிநீர் பாட்டிலை மாற்றுவதற்காக கடைக்கு சென்றேன். அதனை விரைவாக மாற்றி கொடுக்காமல் என்னை அழைக்கழித்தனர்.

15 நாட்கள் கழித்து குடிநீர் பாட்டிலுக்கு பதிலாக வேறு பொருட்களை வாங்கிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டேன். பின்னர் நேற்றைய தினம் பொருட்கள் வாங்க குடும்பத்துடன் கிங் ஷாப்பிங் மால் சென்று இருந்தேன். அப்போது அதன் நிர்வாகி ஒருவித எண்ணத்துடன் சப்தமாக பொருட்களை இப்போதே சரியாக உள்ளதா? என பார்த்து எடுத்து செல்லுங்கள் என கூறினார்.

அதற்கு நுகர்வோருக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டியது தங்கள் நிறுவனத்தின் பணி என விதிகளை சுட்டிக் காட்டினேன். ஆனால் அதற்கு அவர் “அதிரையர்கள் 500 கிராம் புளி வாங்கிசென்றுவிட்டு பின்னர் புளி சரியில்லை என 400 கிராமை கொண்டுவந்து கொடுக்கின்றனர். அதிரையர்கள் ஏமாற்றுக்காரர்கள்” என ஒருமையில் பேச துவங்கிவிட்டார்.

தற்போது கிங் ஷாப்பிங் மாலில் விற்பனை செய்யப்படும் தரமற்ற பொருட்கள் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அதிரையர்கள் +91 9677741737 என்ற எண்ணில் என்னை தொடர்புக்கொள்ளலாம் என்றார்.

இதேபோல் ஏடிஎம் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் நபர்களிடம் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிய பிறகு அதனை கிங் ஷாப்பிங் மால் நிறுவாகனத்தினர் பேசி தீர்த்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மேலும், கஜா புயல் அதிரையை கோரமாக தாக்கியபோது, அத்தியாவசிய பொருட்களை கொள்ளை லாபத்திற்கு 3 மடங்கு விலையில் விற்பனை செய்த கிங் ஷாப்பிங் மால், தொடர்ச்சியாக அதிரையர்களை இழிவாக பேசி வருவது ஏற்க முடியாத செயல் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter