62
அதிரை பிலால் நகரில் கட்டட வேலை நடைபெறும் பகுதியின் அருகே இருந்த குடிசை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் முயற்சியால் தீ கட்டுப்படுத்தப்பட்டு முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்தநிலையில், மின் கசிவு காரணமாக குடிசை தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் தீயணைப்பு துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..