173
டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் முப்பெரும் விழாவையொட்டி சமூக சேவை, கல்வி, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பிற துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கும் விழா சனிக்கிழமை மாலை செங்கல்பட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ரஃபியா அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்காக அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ரஃபியா ஜெத்தா தமிழ் சங்கத்தின் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.