Home » பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச் சங்கம் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்!!

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச் சங்கம் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்!!

0 comment

27-07-2019 மாலை 4 மணி முதல் 6.45 மணி வரை பட்டுக்கோட்டையில் ரயில் உபயோகிப்போர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் திருவாரூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

காரைக்குடி – திருவாரூர் அகலப்பாதை பணிகள் குழு என்ற ஒரு ஒருங்கிணைப்புக்குழு பட்டுக்கோட்டை திரு ஜெயராமன் அவர்களை தலைவராகவும் திரு விவேகானந்தன் அவர்களை செயலராகவும் கொண்டு ஒவ்வொரு ஊர் களுடைய பிரதிநிதிகள் இருவரை உள்ளடக்கி ஏற்படுத்துவது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை அனைவரும் நேரில் சந்தித்து முறையிடுவது.
அனைவருக்கும் உகந்த தேதியில் முன் அனுமதி பெற்று, விதிமுறைகளை மீறாது, பொது நாகரீகத்துடன் திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கவனயீர்ப்பு கூட்டம் நடத்துவது.

வாய்ப்பு கிட்டின் அனைத்து நிலைகளிலும் அதிகாரிகளை அணுகுவது.
தேவை ஏற்படின் கடைசி கட்டமாக நீதிமன்றத்தை நாடுவது.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்று கருத்துக்களை கூறினர்.

திருச்சியில் நடைப்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு கூட்டத்திற்கான (அமைதி வழி போராட்டத்திற்கான) நாள் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter