63
SDPI கட்சியின் அதிராம்பட்டினம் நகரச் செயற்குழு கூட்டம் இன்று(29.7.2019) மாலை 7.30 மணியளவில் SDPI கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிராம்பட்டினம் நகரத் தலைவர் N.M.S ஷாபிர் அஹமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னால் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அதிரை அப்துல் ரஹ்மான் அவர்கள் வருகை தந்தார்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும்,நகரத்தில் செய்யக்கூடிய அடுத்தடுத்த செயல்பாடுகள்,களப்பணிகள்,திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் செயல்வீரர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.இறுதியாக அதிராம்பட்டினம் கிளை தலைவர் அஹமது நன்றியுரை கூறினார்.