முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை Cancel செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் உணவு டெலிவரி நிறுவனமான ZOMATO மூலம் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் உணவை டெலிவரி செய்ய வருவதாக தெரியவந்தது. இதனை அடுத்து, Zomato-விடம் Chat செய்த அமித் சுக்லா, அந்த ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு, Cancellation Fee-ஆக 237 ரூபாய் தர வேண்டும் என Zomato தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து, அதற்கான Cancellation Fee-ஐ தர முடியாது என தனது ட்விட்டர் பக்கத்தில் சுக்லா பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த ZOMATO நிறுவனம் உணவுக்கு மதம் என்பது இல்லை; உணவே மதம் தான் என்று குறிப்பிட்டது. இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உணவை Cancel செய்த நபருக்கு எதிராக கண்டனங்களும், ZOMATO நிறுவனத்தை புகழ்ந்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.