திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள நத்தம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு பலலட்சம் செலவில் போடப்பட்டது .
அதில் 2இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி பெயிலியர் ஆனதாக கூறியும் போடப்பட்ட ஆழ்துளை குழாய்கள் பைப்புகள் மின்மோட்டார்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சிறுவர்களின் உயிருக்கு உலை வைக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு, மக்கள் வரிப்பணத்தில் போட்ட ஆழ்துளை கிணற்றை காணோம் என ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் குடிநீரின்றி அல்லல் படும் நத்தம் கிராம மக்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
மேலும் சிறுவர்கள் சிக்கும் விதத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு தோண்டிய பள்ளத்தை முறையாக மூடவும் குடிநீர் வழங்கவும் கிராம பொது மக்கள் கேட்டுகொண்டனர்.
தவறும் பட்சத்தில் மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.