காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அரசியல் சாசன சட்டப்பிரிவுகளான 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து நாசப்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கிய சேவைகளை முடக்கி உள்ளதையும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 9.8.2019 (வெள்ளிக்கிழமை) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா, மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜைய்னுல் ஆபிதீன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம், தென்சென்னை மாவட்டத் தலைவர் கோரி முஹம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர்(பொறுப்பு) உஸ்மான் அலி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமுமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கைதாயினர்.