194
தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிராம்பட்டினத்தில் (9/8/2019) “அச்சமற்ற வாழ்வே கன்னியமான வாழ்வு” என்ற தலைப்பின் கீழ் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் புகாரி அவர்கள் தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் மற்றும் SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்தீக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.