65
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு்.
புதுமனைத் தெரு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு அருகே இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியை கொண்டு டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாகவும்,இதன் மூலம் பெரிய பாதிப்புகள் நாளடைவில் ஏற்படக்கூடும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.அரசு அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற சம்பவங்களை தடுத்திடும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.