Home » SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத் தலைவர் சுதந்திர தின வாழ்த்து செய்தி….!

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத் தலைவர் சுதந்திர தின வாழ்த்து செய்தி….!

by admin
0 comment

இந்திய தேசத்தின் வளங்களை சுரண்டி கொழுத்த ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து, விடுதலை காற்றை சுவாசித்த தினத்தை நாம் கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 73 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத ஓர் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை அறியாமல், தனி மெஜாரிட்டி மூலம் NIA, UAPA,முத்தலாக், 370 ரத்து போன்ற மசோதாவை சட்டமாக்கி சர்வாதிகார போக்கை கடைபிடிப்பது போல ஆளும் மத்திய பாஜக அரசு செய்கிறது. எதிர்கட்சிகளின் குரல்கள் கேட்கப்படுவதில்லை. தேசத்தின் சுதந்திர காற்றை சாமானிய மக்கள் இன்னும் சுவாசிக்க முடியவில்லை. நவீன காலணி ஆதிக்கத்தின் கீழ் நமது தேசம் அடிமை தேசமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.

வெள்ளையர்கள் ஆண்ட பதவிகளின் பெயர்களை மட்டும் மாற்றி வைத்து கொண்டு ஆட்சி செய்யும் இன்றைய அரசியல்வாதிகள் வெள்ளையர்களை விடவும் நம் நாட்டை சுரண்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சுதந்திரம் பெற போராடியவர்களை நினைவுகூர்வதுடன், அவர்கள் கனவு கண்ட “சாமானிய மக்கள் அதிகாரம் பெற்ற இந்தியா”வை படைக்க இந்நாளில் சபதம் ஏற்போம்.

#ஒன்றினைவோம்_சக்திபெறுவோம்

ரபியுல் கான்
நகரத் தலைவர்
மல்லிப்பட்டிணம் நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter