காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையை அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்களும் அணை திறப்பின் போது உடனிருந்தனர்.
காவிரியிலிருந்து 4750 கன அடி நீரும் வெண்ணாறிலிருந்து 4750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
கல்லணை கால்வாயிலிருந்து 1300 கன அடி நீரும், கொள்ளிடத்திலிருந்து கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீரால் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.